மறக்க முடியவில்லையடி..!

மறக்க முடியவில்லையடி..!

உன் நியாபகத்தின் வேதனைகளை

மறந்து விடு

என நீ சொல்லிய அந்த ஒருமுறை

இன்றும்

ஒரு கோடி முறையாய்

என் காதில் ஒலிக்கிறதடி
..
காதல் எனும் புனித பயணத்தில்

எனை நீ இணைத்த போது

நான் மறுத்திருக்க வேண்டும்..

தவறவிட்ட அந்த தருணத்தின்

தண்டனை தான்

இன்று உன் பிரிவை எண்ணி

தவமிருக்கிறேன்..

உன்னை பார்த்த முதல் தருணம்

நியாபக படுத்திக் கொள்..!

ஒரு பார்வை

ஒரு முறை தான் பார்த்தாய்..!

அவ்வளவுதான்

பற்றிக்கொண்டன என் கண்கள்

கண்ணில் பற்றிய தீ

உடலெங்கும் பரவி எனை சூறையாடியது.

. ஏன் அப்படி பார்த்தாய்...

அதுவும் இப்படி

எரிந்து சாம்பலாகும் அளவிற்கு..!

நீ கடந்து போகும் போது

உன்னை தூர நின்று

தரிசிக்கிற கும்பலில்

ஒருவனாகவே இருந்து விட நினைத்தேன்

நீ விடவில்லை

பற்ற வைத்த தீக்குச்சியாய்

எனக்குள் ஏற்றி வைத்த

எண்ணங்களோடும் எரிகின்ற

மெழுகுவர்த்தியாய்

நானாகி போக

நீ அந்த தீபத்தில்

ஒரு தேவதையாய்

தோன்றி என் நினைவுகளை

ஆரத் தழுவினாய் ..இப்படி..

என் இதயத்தின் வாசலை

பார்வையால் திறக்க தெரிந்த உனக்கு

அதை அடைப்பதற்கு

உன் சுட்டெரிக்கும்

வார்த்தை தானா கிடைத்தது ..

உன் வானில் மின்னிடும் நட்சத்திரமாய்

நானிருக்க கண்ட கனவுகள்

களைந்து போனாலும் வானவில்லாய்

சில தருணம் வாய்ப்பு தந்தாயடி..!

போதும் அந்த வாழ்வு

என விலகி கொண்டேன்..

ஆயினும்

மறக்க முடியவில்லையடி..

உன் நியாபகத்தின் வேதனைகளை

உனக்குள் எனை இழந்த சோகத்தினை.

மறக்கமுடியவில்லையடி.. !.

எழுதியவர் : kavithaayini (27-Sep-11, 9:57 am)
பார்வை : 878

மேலே