சிலைபோலும் எழில்தமிழ்ச் சித்திரமோ

மலையாள வர்மாவின் ஓவியமோ
சிலைபோலும் எழில்தமிழ்ச் சித்திரமோ
கலைந்தாடும் கார்முகில் கூந்தலின்
விலையிலா புன்னகை மேனகையோ !

---காய் விளச்சீர்களால் அழகு பெற்ற வஞ்சி விருத்தம்

மலை/யா/ள வர்/மா/வின் ஓ/விய/மோ

நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நிரை மோ
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
--யாப்பார்வலர்கள் மற்ற அடிகளையும் அலகிட்டுப் பார்க்கலாம்
தளை விதிகள் இப்பாவினங்களுக்கு தேவை இல்லை
மூன்று சொல்லும் ஒரே எதுகையும் நான்கு வரிகளும்
கொண்ட இயல்புப் பாவாக கொள்ளுதல் சாலச் சிறந்தது

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-21, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே