விடைபெற்றது உறக்கம்
உறக்கம் தழுவ
நினைத்த
வேளையில்
தட்டி எழுப்பியது
உள்ளம்..!
சிலிர்த்து விழித்தன
உணர்வுகள் !
வியந்து கேட்டேன்
காரணத்தை ..!
வினவிய என்னிடம்
உரைத்தது மனம் !
தள்ளிவை சற்று
நித்திரையை என்றது !
புவனத்தில் நிகழ்வதை
நினைத்திடு புரிந்திடு !
அமைதியற்ற சூழல்
அல்லல்படும் மக்கள்
அச்சத்தில் அனைவரும்
அவதியுறும் அவனி
அறிவாய் நீயும் !
தீர்வு காண இயலாமல்
தவிக்கும் எனக்கு
வழி ஒன்று கூறாமல்
விழிகளை மூடாதே
உத்தரவிட்டது உள்ளம் !
அதிர்ந்தேன் அடியேன்
ஆணையை கேட்டதும் !
கலைந்தது தூக்கம்
சிந்தித்தது சிந்தை !
வரவிருந்த கனவுகள்
விரைந்து விலகியது !
குழப்பத்தில் மனதும்
வழக்கம் போல
மௌனம் காத்தது !
விடை அறியா வினாவாக
தீர்வு தெரியாத நிலையில்
விடைபெற்றது உறக்கம் !
விடிந்தது பொழுது
முடிவும் காணாது !
என்னைப் போல
பலரும் பரிதவிக்கும்
நிலைதான் இன்று !
பழனி குமார்