பட்டம் தரும் பாடம்

உயரப் பறத்தல்

மானிடரே!
உயரப் பறக்க வேண்டுமா?
மகரந்தம் போல்
எடை குறை!

எந்த எடை?
உடல் எடை அல்ல
சாதியை அடை!
சமயத்தின் எடை!
மதத்தின் எடை!
மனதின் எடை!

வெள்ளத்தோடு
அணைந்து
மலர் உயர்வதை பார்!

உள்ளத்தோடு
உயர்வும் சார்ந்ததே!

உள்ளத்தை
உயர்த்துவது எங்கனம்?
கயமை அகற்றி
கருணையால்
நிரப்பி உயர்த்து!

உள்ளத்தை
அகம்பாவம் அகற்றி
அன்பை ஊற்றி
நிரப்பி உயர்த்து!

பட்டம் கூட
நூலினால்
உயர பறக்கிறது!

படித்தால்தான்
உயர பறக்க முடியும்!

நூலை பிடித்தால்
பட்டம்
உயரப் பறக்கிறது!
நல்ல நூல்களைப் நீ
படித்தால்
உயரப் பறக்கலாம்!!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (7-Jul-21, 11:08 am)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 457

மேலே