புதியது புதியது
புதியது, புதியது,
என்
கவிதை புதியது;
புலம்பித் தவித்த
தவிப்பு புதியது;
என்
கனவு புதியது;
என்
கற்பனை புதியது;
என்னுடன் பிறந்த
கவலை புதியது;
எட்டிப் பார்த்த உலகம் புதியது;
கண்ட காட்சி புதியது;
கண்ட வானம் புதியது;
காலம் தாண்டிய ஏக்கம் புதியது
கறை படிந்த காலம் புதியது;
கல்லாகிய மனமும் புதியது;
கண்ணீர் தோய்ந்த கவலையும் புதியது;
கண்ணாம்பூச்சி விளையாடும் கலக்கமும் புதியது;
காற்றாய்
விரைந்த வாழ்க்கை புதியது;
விரட்டிவரும் வாழ்வும் புதியது;
விஞ்ஞான உலகம் புதியது;
விடியல் தெரியாத உறக்கம் புதியது;
வீதிக்கு வரும் மானம் புதியது;
விதியின் வலிமை புதியது;
புதுமைப் பெண்ணின் புரட்சி புதியது;
புதுமையில் முதுமையடைந்த பெற்றோரை மறப்பது புதியது;
உறவு முறை மறந்தது புதியது;
உடம்பும் நடைபிணமானது புதியது;
உல்லாச உலகம் புதியது;
ஒருவரும் வேண்டாம்
என்று ஒதுங்கி வாழும் வாழ்க்கை புதியது;
படித்த அறிவை பைசாவாக்கும் வித்தை
புதியது;
பணத்தாசையில்,
பாசத்தை விலைபேசிய வழக்கம் புதியது;
பாய்ந்துவந்த நதியின்
தடையம் மறைந்தது புதியது;
பச்சை விரித்த இயற்கை;
பசுமை இழந்து
கிடப்பது புதியது;
குளம் குட்டை
எல்லாம் மாட மாளிகையானது புதியது;
கைபேசியில் காலம் கழிப்பது புதியது;
பிடிக்க மறந்த பட்டாம் பூச்சிபுதியது;
பிச்சிப்பூ வைக்க மறுத்த
தலைபுதியது;
உச்சி வெயில் வரும் முன்னே,
உயிரே துடித்து,
உடனே ஏசிப்போட தவித்த தவிப்பு புதியது;
ஆயத்த ஆடையில்,
அரைகுறையாக
உடம்பைக் காட்டுவது புதியது;
இளமையின் தேடல் புதியது;
இட்ட சாந்து புதியது;
இழுவிய முகச் பூச்சும் தலை வர்ணமும் புதியது;
இழந்த அழகு புதியது;
இளமைளை குழைத்த ஆடை புதியது;
இருட்டியபின் வீடு வருவது புதியது;
நடை புதியது;
நடைமுறை புதியது;
நம்பிக்கை இழந்த வாழ்க்கை புதியது;
நாகரீக வாடை புதியது;
தலைமுறை புதியது;
தலைவிரி கோலம் புதியது;
தலைமுழுக நினைக்கும்,
பெற்றோர்களின் கவலையும் புதியது;
தட்டிக்கேட்க ஆள் இல்லாமல் ,
தடுமாறும் இளமை புதியது;
பலம் இழந்த உறவு புதியது;
பயத்தோடு வாழும் பழக்கம் புதியது;
ஞாலம் புதியது;
காலம் புதியது;
காணும் காட்சிகள் புதியது;
கட்டழகு இழந்த பெண்மை புதியது;
பெண்மயில்,
பிடரி முடியுடன்
திரிவது புதியது;
பிரியமான தோழிகளைமறந்து;
தோளோடு தோள் போட்டு போகும்,
தோழன் என்ற கூட்டம் புதியது;
தொட்டு பழகும் வாழ்க்கை புதியது;
தொலைதூரப்பயணம் புதியது;
தொல்லை தரும் உறவு புதியது;
கொலை நோய்களும் புதியது;
கொல்லை போன பாரம்பரியமும் புதியது;
தொட்டுக்கொண்டே போகும் பழக்கம் புதியது;
தேடல் புதியது;
வேதம் புதியது;
வாதம் புதியது;
வழக்கும் புதியது;
வழக்கமும் புதியது;
சாலை புதியது;
சரணம் புதியது;
சலனம் புதியது;
விருப்பம் புதியது;
விரசம் புதியது;
விரைவு வாழ்க்கை புதியது;
விருப்பம் இல்லா வாழ்க்கையும் புதியது;
விளை நிலம் விலைபோனது புதியது;
வீட்டின் வசதிகளை;
பெருக்கியதும் புதியது;
மாற்றம் மாற்றம் என்று கூறிய;
தடுமாற்றமும் புதியது;
மங்கிய நாகரீகத்தில்
மயங்கிய கூட்டமும் புதியது;
மது பழக்கம் புதியது;
மறந்த மனித நேயமும் புதியது;
கனநேர இச்சைக்காக,
கண்ணியம் இன்றி,
குழந்தையையும் சீண்டும் கொடுமையும் புதியது;
சோறு போடும் விவசாயி,
சோற்றுக்கு வாடுவது புதியது;
நதியைப் பிடித்து வைத்து,
சொந்தம் கொண்டாடும்
தேசம் புதியது.
தேசத்தை நாசம் செய்யும்;
தலைவர்களின் ஆட்டம் புதியது;
தன் இனத்தை தானே,
சுரண்டி வாழும் ஆட்சியாளர்களின்
ஆட்டமும் பதியது;
ஆட்சியை பிடிக்க,
அனைத்து தவறுகளையும் செய்யத்துடிக்கும்,
கட்சிக்காரர்களின் ஆளுமை புதியது;
சுரங்கள் புதியது;
சுற்றித்திரிய நினைக்கும் நினைப்பு புதியது;
சுகபோக வழக்கை புதியது;
விஞ்ஞான விளையாட்டு புதியது;
விண்ணை தொடத்துடிக்கும் கூட்டம்,
வினோத விளைவுகளும் புதியது;
மனிதாபி மானத்தை மறந்தது புதியது;
மண்ணையும் மனித இனத்தையும் காக்க
மறந்ததும் புதியது.