மாயா உலகு

மூப்பின் தாக்கத்தில் அவள்
எப்படிச் சொல்வின் அவள்தான்
நேற்றைய உலகப் பேரழகி
அவள் ஓயாரத்தில் உலகே
தன்னை மறந்து அகமகிழ்ந்து
அவள் நினைப்பில் இருந்த காலம்..... ஹும்
இன்று நோயின் தாக்கத்தில் ....
உருக்குலைந்து..... ஒரு மூலையில்
தன அரண்மனையில்..... துயிலில் அவள்...
கனவு காண்கிறாள்.....

கனவில்.... அவள் தன்னையே காண்கிறாள்
பேரழகியாய்......
துள்ளும் மானாய்.... ஆடிவரும் தோகை மயிலாய்
பாடும் குயிலாய்.. உயிர்ப் பொற்சிலையாய்....
கனவு கலைந்தது....
அவள் .....அவள்.... கண் திறந்து பார்க்கின்றாள்
எல்லாம் புரிந்ததோ..... யாக்கையின் நிலையாமை

மெல்ல சிரிப்பு..... கண்மூடுகிறது
அவள் ஆவியும் பிரிந்திட......

மாய உலகு......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jul-21, 9:49 am)
Tanglish : maya Ulaku
பார்வை : 48

மேலே