செல்லமாய் நீ பார்க்கும் பார்வை
எப்போதும் போலவே
ஏமாற்றமாய் வாயடைத்து
நிற்கிறேன் வஞ்சி நின்
கூர்விழி பார்வையிலே ...
எடுத்த எத்தனிப்புகள் எல்லாம்
ஏதும் அற்று போகின்றன உன்
ஒற்றை ஓர புன்னகையில் ...
சேர்த்து வைத்த வார்த்தையெல்லாம்
செத்து தான் போகுதடி
செல்லமாய் நீ பார்க்கும்
பார்வையிலே ...
இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 12650
கோவை-35