புத்தகப் பூக்கள்
விரிந்ததால் ஈர்க்கும் பூக்கள்
விதவித வடிவில் உண்டாம் !
பிரிந்ததால் மணக்கும் பூவும்
பெரிதென பலவும் உண்டாம் !
பிரித்திட மணக்கும் ஏடும்
பிரியமாய் படிப்பில் உண்டு !
விரிவுடன் படித்து நீயும்
விரித்திடு அறிவை ஏற்றி !
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.