சிவலிங்கத்தின் விளக்கம்

சிவலிங்கத்தின் விளக்கம்

நாதம் சக்தி சிவமே விந்து --- அப்பனே
இருவர் குடிவீடே ஒங்கார வீடு
உலகமெல்லாம் அதுக்குள்ளே சமைந்த வீடு
சிவமாகிய விந்து மாலின் வீடுள்
நாதமாகிய சக்தி பிரம்மன் வீடுள்

(அகத்தியர் பரிபாஷை)
அகத்தியர் பரிபாதை 500 இல் சிவலிங்கம் என்பது
விந்து நாதங்களையே விளக்குவதாகவேக் கூறுகிறார்.
அதாவது நாதம் என்கிறது உகார சக்தி என்கிறார்
சிவம் என்கிறது விந்து எனப்படும் அகரம் என்கிறார்.
இந்த நாத சக்தி சிவ விந்துவானது உலகில் உள்ள அனைத்து
ஜீவராசகளுக்கும் மற்றும் பொருல்களிலெல்லாம் இருப்பதால்
உலகம் அமைத்த வீடே சக்தி சிவம் என்கிறார்.

மண்ணின் அதிபதி பிரம்மன் சக்தி மண்ணான பூமியாம்
இதுவே லிங்கத்தை சுற்றியுள்ள ஆவுடை (யோனி) நாதத்தை குறிக்கும்
மாலின் வீட்டுள் விந்தென சொல்ல மாலே லிங்கமாம் லிங்கத்தினுள்
விந்து கண்ணுக்கு புலப்படா த்தால் மாலாகிய லிங்கம் காட்சி பொருளாய் நிற்கிறது
இதன் விளக்கம் எவரும் சக்தியாகிய நாதத்தை எளிதில் மண்ணிலிருந்து
சேகரிப்பர். ஆனால் லிங்கமெனும் மாலின் வீட்டிலிருக்கும் விந்தை எளிதில்
கண்டறிய முடியாதாம். விந்து யென்பது தண்ணீர் தண்ணீரின் அதிபதி மாலவன்.
விந்து நாதமும் சேர்ந்த பொருளே காய கற்பம் (சாகா மூலியாகும் . பலரும் நாதம்
எடுக்கும் வழி அறிந்தும் விந்தினை கடலிலிருந்து பிரித்தடுக்க முடியாது
தவிக்கின்றனர். இதனால் தான்

" விந்து விட்டவன் (எடுக்கா விட்டவன்) நொந்து கெட்டது இதைத்தான் குறிக்கும்
என்பதை அறிந்து கொள்வீர் ஞானவான்களே .



இந்த பாடலை திரு ஆவுடையப்பன் உயிரோடு இருக்கும் போது விளக்க
கேட்டுக்கொண்டார் . அப்போது நான் விளக்காமல் விட்டேன்.அதனால் இந்த
பாடலையும் விளக்கத்தையும் அவருக்காக சமர்ப்பிக்கிறேன்.அவர் ஆத்மா
இறைவனிடமே சாந்தி பெறட்டும். போற்றுவோம் அவர் தமிழ் தொண்டை?



......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Jul-21, 9:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே