நிற்பன பறப்பன
குருவி குழி நீரில்
நீராடலாம்
குருவி குற்றாலத்தில் போய்
குளிக்க முடியுமா ?
எருமை குட்டையில்
நின்றல்
நிட்டையில் இருப்பதாக பொருளில்லை ?
குயிலின் கருமை நிறந்தான்
காக்கை
குயில் போல் பாடிட முடியுமா ?
கீ கீ என்று கீச்சிடும்
கிளி பேசவும் செய்யும்
அழகிலோ கிளியோ பாத்ரா !
மயில்போல் அழகிய தோகை இல்லை
வான் கோழிக்கு
ஆடினால் அசத்திவிடும் !
கனைப்பதிலும் உதைப்பதிலும்
வல்லமை உள்ள கழுதைக்கு
பொதிசுமப்பதில் பொறுமையோ பொறுமை ?
வாலும் உண்டு தாவுதலிலும் வல்ல
குரங்கு
மனிதனின் மாஜி வடிவம் !