தமிழ் வெறியை திருப்பு
ஒழுகிசை அகவலோசை
நேரிசை ஆசிரியப்பா
தமிழில் தேனும் பாலும் கசிய
அமிழ்தென தீங்கனி சாருங் கலந்து
கொடுத்தனர் கவிகளும் புலவரும் அன்று
இன்றைப் புலவனும் கவிஞர் பட்டம்
பெற்றும் கைக்கட்டி சொல்ல மந்திரம்
வளருமா தமிழும் வளரா
கிளறு கின்றார் வயிற்றெரிச் சலையே
தமிழில் தேனும் பாலும் கசிய
அமிழ்தென தீங்கனி சாருங் கலந்து
கொடுத்தனர் கவிகளும் புலவரும் அன்று
இன்றைப் புலவனும் கவிஞர் பட்டம்
பெற்றும் உரக்க சொல்ல மந்திரம்
வளருமா தமிழும் வளரா
கிளறு கின்றார் வயிற்றெரிச் சலையே
இன்றைப் புலவரும் கவிப்பெருந் தகையும்
தமிழில் வைபெயர் பலகை என்றிட
அருவியாய் பொழியு தாம்தே னுடன்பால்
ஆங்கிலம் படிக்கா தேயென அமிர்தம்
சொட்டு மாசொல் வேண்டாம் மற்றைய
மொழியென வளர்ந்ததா தமிழ்மொழி சொல்லு
திருடர் இருக்க தமிழ்மொழி வளரா
அரிச்சுவ டியிலா த.றிவு வளரா
ஒருவா சகம்படிக் கான்யெழு தானாம்
தேவா ரத்திரு வாசகஞ் சொன்னேன்
தமிழ்வெறி திருப்பும் பக்தியில்
தமிழ்முரு கன்சிவ சக்தியெ லாமொன்றே
....