என்னாளோ..?
*✍️கவிதை ரசிகன்* படைப்பு....
பெண்ணே!
நீ காத்துவரும்
கற்பு போல்...
என்னை
பாதுகாக்க வரும் நாள்
என்னாளோ...?
உன் மார்பை விட்டு
நீங்காமல்
வைத்திருக்கும்
மாராப்பு போல் ...
என்னையும்
உன் மார்போடு
சேர்த்து கொள்ளும் நாள்
என்னாளாே...?
உன் இஷ்டதெய்வத்தை
ஆராதனை
செய்வது போல்..
என்னையும்
ஆராத்திக்கும் நாள்
என்னாளோ... ?
ஆடையிடம்
உன்னை
முழுவதும்
அர்ப்பணித்து போல்...
உன் இதயம்
முழுவதையும்
எனக்கு
அர்ப்பணம் செய்யும் நாள்
என்னாளோ...?
குழந்தையிடம்
கொஞ்சிப் பேசுவது போல்
என்னிடம்
கொஞ்சி பேசும் நாள்
என்னாளோ....?
புள்ளியை
எண்ணிக்கொண்டு
கோலம் போடுவது போல்...
என்னை
எண்ணிக் கொண்டு
கோலம் போடும் நாள்
என்னாளோ...?
நீங்காமல்
நீ காற்றோடு
ஒன்றாக
வாழ்வது போல்....
உன்னோடு
ஒன்றாக
நான் வாழும் நாள்
என்னாளோ....?
*கவிதை ரசிகன்*
நன்றி....!