ஒரு மனைவியின் குரல் குமுறல்

" கொந்தளிக்கும் மனக் கடலில் தத்தளிக்கும் 'எண்ண படகு', அலைகளுக்கு வைத்துவிட்டது தன்னை 'அடகு'.

'பிரிவு' எனும் 'தீ' பற்றி விட்டது,
'துயரம்' என்னும் 'நோய்'
முற்றி விட்டது.
கற்பனைக் குளமோ' வற்றி விட்டது,
இதில் 'கடிதம்' என்று எதை எழுத?

மழை இல்லா பயிர் போல,
உடல் இல்லா உயிர் போல,
நிலவில்லா வானம் போல,
கிளை இல்லா கொடி போல,

என்னை துடிக்க வைத்தாய்!
கண்ணீர் வடிக்க வைத்தாய்!

என்ற வசனம் பேச நான் தயார்,
ஆனால், என் துயர் போக்குவார் யார்?

உனை 'பதி' என்று எண்ணி வந்தேன்,
'சதியாக' என்னை விட்டு பிரிந்தீர்!

கேட்டால் 'விதி' என்கிறீர்
நாம் 'சதிபதி' ஆவது எப்போது?

'மதி' கொண்டு யோசித்தால்
என் 'கதி' உமக்கு தெரியும்!

'அதி விரைவில்' வந்து விட்டால்,
நான் 'சரணாகதி' ஆக துடிப்பது,
புரியும்!".

எழுதியவர் : (11-Jul-21, 11:36 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 174

மேலே