வலயப்பட்டி இல்லாட்டி கோவில்பட்டி
நான் இருப்பது அமிஞ்சிக்கரை
இதுவரை எனக்கில்லை கறை
என் மனைவி ஊரோ ஆத்தூர்
ஆறு ஓடும் ஊரோ வேறு ஊர்
என் பையன் படிப்பது ஈரோடு
ரோட்டுக்கு மேல அவன் வீடு
நல்ல ஊரு உளுந்தூர்பேட்டை
அங்கே விற்றேன் என் வீட்டை
சென்னை அடுத்து செங்கல்பட்டு
இங்கு காலில் அடி, செங்கல் பட்டு
என் மாமனார் ஊரு தென்பழனி
அவர் குடி போனது வடபழனி
மின்சார ரயில் ஆரம்பம் தாம்பரம்
இங்கே தொடுப்பாங்க கனகாம்பரம்
என் மாப்பிள்ளைக்கு திருச்சி
அடடா, தூக்கம் கலைஞ்சிருச்சு
ஆனந்த ராம்