நீலவண்ண ஓவியமோ

நீலவண்ண ஓவியமோ ஓடும் விழிமீன்கள்
நீலவலை கள்நீந்தும் பேரெழிலோ பூங்குழல்
பாலையில் நீநடந்தால் பாலை வெளியிலும்
நீலநைல் ஓடி வரும் !

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

நீலவலை ---நீல +அலை என்று பொருள் கொள்ளவும்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-21, 10:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே