இணையதளத்தால் வரும் பக்க விளைவுகள்
ஒரு ஊரில் சுந்தரம் மீனாட்சி தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு அன்பு என்னும் பெயரைச் சூட்டி பெயருக்கு ஏற்றார் போலவே வளர்த்து வந்தனர்.
அன்பும் நன்கு கல்வி கற்கும் ஒரு நல்ல மாணவன் பெற்றோர்களிடமும் ஆசிரியரிடமும் நன்கு மரியாதையாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல உள்ளம் கொண்டவன். சக தோழர்களிடம் அன்பாகவே இருப்பான். அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெறுபவன். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்வி கற்றான்.அனைவரின் பாசத்திற்கும் சொந்தக்காரன்.
ஒரு நாள் அவன் அப்பா ஒரு மடிக்கணினியை அவன் பிறந்த நாள் பரிசாக அளித்தார். அவனும் அதை அவன் படிப்பிற்காக பயன்படுத்தினான். அதன்மூலம் பொது அறிவை வளர்த்துக் கொண்டான்.
ஆனால் அவன் நண்பன் ஒருவன் அவனுக்கு இணையம் விளையாட்டை விளையாடும் ஆசையை தூண்டினான் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பக்கம் செல்ல ஆரம்பித்து விட்டான். படிப்பிலும் கவனம் குறையத் தொடங்கிவிட்டது. அவன் பெற்றோர் அவனை அழைத்து அறிவுரை கூறினார். அன்பும் சரி என தலை ஆட்டுவது போலவே ஆட்டினான். இருப்பினும் அவன் மனம் இணைய விளையாட்டிலேயே சென்றது.
தேர்வு நாளும் நெருங்கியது ஆனால் அவனால் படிக்க முடியவில்லை. தேர்வு நாள் வந்தது. தேர்வு அறைக்குள் சென்றான். வினாத்தாளை வாங்கினான் அவனுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அவனுக்கு எந்த வினாவுக்கும் விடை தெரியவில்லை. அப்பொழுதுதான் அவன் தவற்றை அவனும் உணர ஆரம்பித்தான். அவன் விடைத்தாள் முழுவதும் கண்ணீரால் நனைந்தது.
அவன் பிறகு மனம் திருந்தி இணையதள விளையாட்டை விட்டு விலகினான். இணையதள விளையாட்டு சேர்வதற்கு முன்னால் இருந்து அன்பாகவே இருந்து நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றான்.
அவன் லட்சிய படி அன்பு தேர்ச்சி அடைந்தான் நேர்மையான மாவட்ட ஆட்சியராக பணி புரிந்தான். அவன் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து வந்தான்.
கதையின் நீதி:
நவீன காலத்தில் மாணவர்களின் முன்னுள்ள வாய்ப்புகளும் அதிகம் இடையூறுகளும் அதிகம் கதையில் வரும் அன்பு முதலில் இடையர் களில் சிக்கிக் கொண்டாலும் இடையூறுகளைத் தகர்த்தெரிந்து வெற்றியாளனாக மாறினான் அதுபோல மாணவர்கள் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் தனக்கு வரும் இடையூறுகளை தகர்த்தெரிந்து வெற்றியாளனாக விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்.