அதிர்ஷ்டம்
கோவில் வாசலில் வயதான ஒருவர் பிச்சைக்காரரை போல் அமர்ந்திருந்தார்.
நன்கு வாழ்ந்து கெட்டவர் போலும் யாரிடமும் யாசகம் கேட்காமல் துண்டை மட்டும் தன் முன்னே விரித்து கண்களை மூடி அம்மனை நினைத்து தியானத்தில் அமர்ந்திருப்பதை போல் அமர்ந்திருந்தார் அம்மனின் பெயரை உச்சரித்த படியே ஆனால் அவர் வயிற்று பசியின் கொடுமை அவர் முகத்தில் பெரிதும் தெரிந்தது.இருந்தும் யாசகம் கேட்கவே கூடாது என்ற எண்ணத்தை மட்டும் கைவிடவேயில்லை .அவர் மனதில் மட்டும் அந்த அம்மனுக்கு இரக்கமிருந்தால் எனக்கு உணவை அவளே தருவாள் என்ற முழு நம்பிக்கையில் அமர்ந்திருந்தார்.
ஆனால், அந்த வழி சென்ற பலரும் அவர் தியானத்தில் இருப்பதகாவே எண்ணி அவரை கடந்து சென்றனர்.மூன்று நாட்களாளக இப்படியே அமர்ந்திருக்கிறாரே என்று அந்த கோயில் அர்ச்சகரும் கூட அவரிடம் வந்து ஏன் உணவருந்தவில்லை என்று கேட்காமல் அவருடைய கடமையிலே கண்ணாயிருந்தார்(வேறென்ன தட்டுல விழுற துட்டு மேல தான் கண்ணு),
இரவு கோவில் நடையை சாத்திவிட்டு குருக்களும் புறப்பட்டு விட்டார்.
பெரியவர் பசியின் கொடுமையில் தன் சுய நினைவை இழக்கும் நிலை வந்தது .அப்போது தான் இவரின் ஓலங்கள் அந்த அம்மனின் காதுகளில் விழ.உடனே அம்மன் தனக்கென தங்க தட்டில் பரிமாறபட்ட பிரசாதங்களை எடுத்து இவர் முன்னே வைத்து அங்கிருந்து மறைந்தார்.ஒரு வேளைக்காவது உணவு கிடைத்த சந்தோஷத்தில் அதை உண்டதும் உண்ட மயக்கத்தில் உறங்கி விட்டார் அந்த பெரியவர் .
காலையில் கோவிலை திறந்த குருக்களுக்கு அதிர்ச்சி .இரவு அம்மனுக்கு படைத்த பிரசாத தட்டு காணமல் போனதை கண்டு.(காலையில வந்த உடனே அவர் கண் எப்பவும் அந்த தங்க தட்டுமேல தான் இருக்கும் சும்மாவா 2 kg ஆச்சே)
அடபாவி நான் இதை மாடல் செய்து வைத்து ஆட்டைய போடலாம்னு நினைச்சா எவனோ முந்திகிட்டிருக்கானே பூட்டை உடைக்காம எப்படி திருடி இருப்பான்.ஒரு வேலை தர்மகர்த்தா வேலையா இருக்குமோ .
அவர்கிட்டதான் இன்னொரு சாவி இருக்கு என்று மனதிற்குள் புலம்பி கொண்டே வாசலுக்கு ஓடி வந்து தங்க தட்டு காணமல் போனதை அலறிய படியே தெரிய படுத்தினார் அனைவரிடமும் .
உடனே அங்கே கூட்டம் கூடியது.கோவில் தர்மகர்த்தாவிற்கு இந்த செய்தி தெரிவிக்கபட்டு அவரும் அங்கே விரைந்து வந்து .
கோவில் குருக்களை பார்த்து என்ன ஓய் விளையாட்றேளா இராத்திரி கோவில பூட்டுனது நீ காலையில திறந்தது நீ பூட்டுன கோவில்ல தட்டை காணும்னா என்ன ஏதாவது திட்டம் திட்டுறியா என்று.
இதை கேட்ட குருக்கள்.என்ன ஓய் உங்க பாவத்தை என் மேல கட்டுறேளா .ஏன் இராத்திரி நான் போனதுக்கு அப்புறம் உங்களிடம் ஒரு சாவி இருக்கே அதை பயன்படுத்தி நீ ஏன் ஓய் எடுத்திருக்க கூடாது .அந்த அம்மனே கதினு இருக்க என்ன குறை சொல்றேள்.
இப்படியே இருவருக்குள்ளும் வாக்கு வாதம் நீண்டு கொண்டே போன தருணத்தில் .கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி கொஞ்சம் எல்லோரும் நிறுத்துங்க தட்டு இங்க தான் இருக்கு என்று கையை நீட்ட .
அனைவரும் சட்டென்று அந்த பெண்மணி கை நீட்டிய திசையை நோக்கி திரும்பினர்
பெரியவர் இத்தனை சத்தங்களையும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் இல்லை அது மயக்கம் என்றும் கூறலாம்.
அனைத்து கூட்டமும் அந்த பெரியவரை சூழ்ந்து நின்றது.அப்போது ஒரு முதியவர் கோவில் பிரசாதத்தை உண்டு விட்டு வாயை கூட துடைக்காமல் படுத்திருக்கிறார் பாருங்கள்
உடனே கூட்டத்திலிருந்த ஒரு பாட்டி நேற்று புல்லா உக்காந்து அந்த அம்மன் மந்திரத்தையே உச்சரித்திட்டிருந்தார் அப்போதே நினைத்தேன் இவரு கிட்ட ஏதோ சக்தி இருக்குனு இப்போ பாருங்க அந்த அம்மனே தனக்கு படைச்சத எடுத்துட்டு வந்து இவருக்கு ஊட்டி விட்டு போயிருக்கு .இவர் பெரிய சித்தர் என்று கூற.
உடனே ஆமாம் ஆமாம் அவர் கண்களில் பாருங்க ஒரு வட்டம் தெரியுது முகமெல்லாம் வெளிறி எப்படி பிரகாசமா இருக்கு பாருங்க நிஜமாவே இவரு பெரிய சித்தர் தான் நேற்று முழுவதும் இங்கேயே இருந்தார் எதுவுமே சாப்பிடலை யார்கிட்டயும் யாசகமும் கேட்கலே அப்பவே யோசிச்சேனு குருக்கள் சொன்னார்
அதன் பின்னர் அவரை ஒரு பெரிய சித்தர்.மகாபுருஷனாகவே அந்த ஊர் மக்கள் ஏற்று கொண்டனர்.
தினமும் படையல் காணிக்கை நெய்வெத்தியம் என்று ஒரே அமர்க்கள பட்டு
இழந்த தன் வளமான வாழ்வை செழிப்புடன் வாழ்ந்தார் பெரியவர்.
எங்கே வாயை திறந்தால் ஏதாவது கேட்பார்களோ என்று உண்பதை தவிர வேறு எதற்கும் வாயை திறப்பதே இல்லை.இவருக்குள்ளும் இன்று வரை நிஜமாகவே அம்மன் வந்து உணவை ஊட்டியதாக தான் எண்ணி வாழ்ந்து வருகிறார் அமோக மாக.
(இந்த கதையில ட்விஸ்ட் என்னன்னா அந்த தட்டை அவருகிட்ட வைச்சது அம்மன் இல்லை தினமும் இரவுல உண்டியல் திறந்து தன் கை செலவுக்கு பணம் எடுக்க வந்த கூட்டு களவானிகள் குருக்கள் மற்றும் தர்மகர்த்தாவின் மகன்கள்.
இதை வெளிய சொன்னா எங்க அதுக்கப்புறம் உண்டியல திறக்க முடியாதுனு மூடிட்டு நின்னுட்டு இருந்தாங்க வெளிய சொல்ல முடியாம)
இப்படி தாங்க அதிர்ஷ்டம் எப்போ எந்த வழியில கதவை தட்டும்னு தெரியாது .
அந்த சந்தர்ப்பங்களை நாம நழுவ விடவும் கூடாது .அதே நேரத்துல அதிர்ஷ்டத்தையே நம்பி இருக்கவும் கூடாது