ஆன்மா புரிந்தது

ஆன்மா சூட்சும மானது என்பது
ஆன்றோர் சொல்வாக்கு அதைப் புரிந்துகொள்ள
எனக்கோர் தருணம் கிட்டியது அதுவே
அந்த பழைய 'பகவத் கீதை'ப்
புத்தகத்தை திறந்த நான் அந்த
திறந்த ஏட்டினிலிருந்து மெல்ல நழுவி
ஓடும் அந்த சிற்றெறும்பினும் சிறிய
பூச்சி ஓட்டத்தில் கண்டேன் ஆம்
அதற்குள்ளும் ஒரு ஆத்மா ஒண்டியிருப்பது
அதனுள் உறையும் அதேயளவு ஆன்மாதான்
மதகஜத்தினுள்ளும், நம்முள்ளும் எறும்பினுள்ளும் என்பது
தெள்ளத் தெளி வானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jul-21, 8:01 am)
பார்வை : 61

மேலே