எழுதுகோலின் ஏக்கம்

புத்தியை தீட்டும் தகவல்
புத்தகஙகளில் இருப்பதால்
வாசிக்கும் பழக்கத்தை
நேசிக்க பழகினேன்..

சற்றே கிடைத்த பொழுதில் 
புதிதாக வாங்கிய
புத்தகத்தை புரட்டினேன் ...
எனக்குள் புதைந்த
எண்ண ஓட்டங்கள்
திரட்டினேன்..

ஆம்.
ஒரு சில வரிகள்
ஓராயிரம் உணர்வுகளை
எனக்குள் தந்தது...
என் எழுதுகோலுக்கு
வேலையும் வந்தது...

உள்ளத்தே உதித்த
எண்ணத்தை எழுத்தாக்கி
பள்ளத்தே பாய்ந்தோடும்
அருவி போல்
சலசலவென படைத்தேன் ..

ஓவ்வொரு வார்த்தைக்கும் 
அர்த்தம் கொண்டு அழகு தந்து
தாக்கமும்  வாசமும்

வரியில் தந்து
எதிர்கால தேடலை
எழுதுகோலில் ஏற்ற
ஏக்கம் கொண்டேன்...

பாசத்தில் நிறைவை முதல்
வரியை எழுதி
ஆக்கமும் தேடலும் அடுத்த
வரியில் கூட்டி 
எதிர்பார்ப்பின் வெளிப்பாட்டை எழசெயய ஏங்கினேன்
எழுதுகோலில்..

முதலில் எதை எழுத
அடுத்த வரி 
எப்படி இருக்கும் என்றெல்லாம் 
கவலைப்படாமல் 
கண்டதைக் கிறுக்கி 
கதை எழுதும் கயவர்கள்
மத்தியில் என் எழுதுகோலின் வரிகள்
எம்பி எழதுடிக்கும் ..
தமிழனின் அடையாளம் 
தலைகுனிவதை தடுக்கும்...

எழுதியவர் : ஸ்ரீவித்யாகலைவாணி (15-Jul-21, 4:14 pm)
Tanglish : ezhuthukolin aekkam
பார்வை : 516

மேலே