ஆர்வம் அடித்தளம்....

*ஆர்வம்_அடித்தளம்*

வெற்றிக்கு முதல் படி
தோல்வியாக இருந்தாலும்
தோல்விக்கு முதல் படி
ஆர்வம் இல்லாததே!

உன்னிடம்
ஆர்வம்
கடலளவு இருந்தால்..
உன்னால்
உலகளவு சாதிக்கலாம்...

காற்றுக்கும் வடிவம் கொடுக்கலாம்
நீருக்கும் நிறம் கொடுக்கலாம்
எரிமலையையும் எதிர்த்து நிற்கலாம்
பனிமலையிலும் படுத்துறங்கலாம்

சாதிக்க வேண்டுமென்ற
ஆர்வம் வந்துவிட்டால்
சாதிப்பதற்கான ஆற்றல்
தானாக வந்துவிடும்

எல்லையில்லாத ஆர்வம்தான்
வெற்றியின்
எல்லையை தொடவைக்கும்...
அளவில்லாத ஆர்வம்தான்
வெற்றியின்
அளவை நிர்ணியக்கும்

ஆர்வம் இருந்தால்
எட்டியதை பிடிக்கலாம்
சாதனைகள் சமைக்கலாம்
ஆசைப்பட்டதை ஆடையலாம்
சரித்திரம் படைக்கலாம்

தடைகற்ளை தகர்த்தெறிந்து
இடஞ்சல்களை இடித்தெறிந்து
கஷ்டங்களை களைத்தெறிந்து
துன்பங்களை தூக்கியெறிந்து
சோம்பலை அடித்தெறிநது
பிரச்சனைகளை பிளந்தெறிந்து
லட்சிய பாதையை எளியதாக்கி
வெற்றியை
அடையச் செய்வதில்
ஆர்வத்திற்கு நிகர்
வேறேதுமில்லை.......!!!

*படைப்பு*
*கவிதை ரசிகன் குமரேசன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Jul-21, 8:42 pm)
Tanglish : AARAVAM adithalam
பார்வை : 136

மேலே