அதனில் மயங்காமல்

தனித்து இயங்க நினைத்தால்
செழித்த அறிவும் அதனுடன்
நிலைக்கும் தொடர் முயற்சியும்
உறுதியான ஈடுபாடும் வேண்டும்

புறம் பேசுவோர் குரலை
உரமாக்கும் வழித் தெரியணும்
மரமென சில நேரங்களிலும்
மறமென பல நேரங்களிலும்

மாற்றிக் கொண்டு முயலும்
தெளிவான ஞானம் வேண்டும்
பயப்படாமல் பம்பரம் போலவே
செயல்பட தயாராக வேண்டும்

வெல்லத் தகுந்த வினையின்
ஊக்கிகளை இனங்கண்டு சேர்த்தே
வெற்றிக்கு உரியவனாய் நம்மை
மாற்றியே வெல்ல வேண்டும்

கள்ளமும் கபடமும் நம்மை
பற்றும் மனதையும் மாற்றும்
என்றும் அதனில் மயங்காமல்
நிற்கும் நீயே எதிர்கால வழியாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jul-21, 8:15 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : athanil mayangaamal
பார்வை : 46

மேலே