பொன்னுக்கு நிகர்

பல நேரங்களில் நம் மனம்
பலம் குன்றியே போகின்றது
சில தீச்சொல்லரின் கெடு சொல்
நம்முள்ளே படபடப்பை உருவாக்கி

வெல்லும் செயலையும் வீணாக்கி
பொல்லா நிலையில் தள்ளிவிட்டே
பயத்தை எந்நேரமும் உருவாக்கி
உறுதியை உருக்கி விடுகிறதே

ஒருமுறை தோற்றுவிட்டால் உலகமே
இருண்டதாய் தோன்றுவதை தவிர்த்து
இன்னொரு முறை வீறுடன் முயன்றால்
பொன்னுக்கு நிகர் வெற்றி கிட்டுமே

கடனே என்று எதிலும் முயலாமல்
கற்றுக் கொள்ளலாம் என முயன்றால்
வெற்றிக் குதிரை நம்மை என்றும்
விட்டு அகலாது என்பதை உணரலாம்

வெற்றிக்கு விலை வைப்போர் பலர்
முயற்சிக்கு விலை உலகில் இல்லை
மாய மனதை உறுதி எனும் கயிற்றால்
திறம்பட இயக்குவோரே உலகின் தலையாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jul-21, 7:54 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே