நீயே நீதானே

நீயே நீதானே நீதானே..!

எனக்கென எழுதப்பெற்ற
என் உயிரே..!

என் கனவே..!
என் அழகே..!
என் அன்பே..!
நீயே நீதானே நீதானே..!

என்னாளும் அன்பே..!
பூவிழி உனங்கே கண்டு சிறுப்புன்னகை பூத்தேன்..

சென்றாலும் நீ அன்பே..!
எனையே மறந்தே
உனை நினைத்து தேய்ந்தேன்...

அடியே காதலால்,
உனைக் கண்டால் குளிரிலும் வியர்வை வடியுமே...

கூறா காதலால் கண்ணீரும்
தானாக ததும்பி விழுமே ..

வெண்குடை கொண்டு பூமிபந்தைக்
காக்கும் வானமுமாய் போலவே

அன்புகொடை கொண்டு உம்மைக்
காக்கும் என் இதயமுமாய் ஆகும்

பூவினுள் உள்ள தேனுமாய்,
உடலினுள் உள்ள உயிருமாய் போலவே
வாழ்வினுள் உள்ள காதலுமாய் ஆகும்

வெகுதூரம் போனாலும் உனதின்
நினைப்பலைகள் எம்மை ஆளும்..

நீயே நீதானே நீதானே..!

எனக்கென எழுதப்பெற்ற
என் உயிரே..!

என் கனவே..!
என் அழகே..!
என் அன்பே..!
நீயே நீதானே நீதானே..!

இனிய கனாவை கொடுத்தாய்
பரிசாய் எனக்கு..

கொடுப்பேன் மாறாய் வெண்நிலாவை பூவாய் உனக்கு..

சத்தங்கள் எல்லாம் சங்கீதமாகுதே...
யுத்தங்கள் எல்லாம் சாந்தமாகுதே...

இந்நாளிலே இந்த காதல் கிருக்கிலே..

நீயே நீதானே நீதானே..!
என்றே தோன்றூதே..

நீயே நீதானே நீதானே..!
என்றே சொல்லூதே ...

நீயே நீதானே நீதானே..!
என்றே வாழுதே ...

எழுதியவர் : BARATHRAJ M (17-Jul-21, 2:22 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : neeye neethanae
பார்வை : 297

மேலே