யாசிக்கிறேன்
உன் மனதில்
எனக்கொரு இடம்
பேசும் மொழிகள் யாவும்
புன்னகையாய்
பேச விரும்பா மொழிகள் யாவும்
மௌனமாய்
ஆறுதலாய் சில
வார்த்தைகள்
அன்பாய் சில
பார்வைகள்
அக்கறையாய் சில
உரையாடல்கள்
கண் ஜாடைகளில் சில
புரிதல்கள்
உன் செல்லக் கோவம்
சில மணித்துளிகள்
கண்ணீர் துடைக்கும்
உன் கரங்கள்
அரவணைத்துக் கொள்ளும்
உன் அன்பு
உன்னருகில் நானாக
என்னருகில் நீயாக
யாசிக்கிறேன் உன்னிடம்
இந்த அன்பிற்காக...!!