உசுராலி
உசுராலி உன்னில்
முழு அன்பில் உருவானதே
வாழ்வு ...
கனவுகள் வரும் கண்ணீர்
வரும் .. அதற்கு பழகு..
மனது
பறக்கும் பறவையின்
சிறகு ...
வெயில் கீற்றில்
மழை பொழிந்திடும் பொழுது
வானில் ஏழுவண்ணத்தில்
வானவில் வளைவு
அழகு...
பிஞ்சு முகத்தில்
கொஞ்சும் இதழில்
அஞ்சும் விழியில்
வர்ணம் ஆயிரம் ...
பனிஇரவுகள் குளிரில்
நீ நான் அருகில்
இருக்கும் நொடியில் இன்பம் ...
அன்றுபோல் இன்னொரு நாள்
வாழ்வில் வந்து நினைவில் நின்றபடி இல்லை எதுவும் ...
விண்மீன்கள் கண்சிமிட்டும்
வானின் விரிப்பில் ...
குயிலின் கரு இருக்கும்
காக்கை கூட்டில் ...
மழலையின் குறுநகை
அன்னை பேச்சில் ...
இளமையின் கடமை
அவளின் மடியில் ...