அவன் பெயர்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா- யாரிடம் கேட்டும் பயன் இல்லை...
யாவரும் அவனைத் தேடி தான் அலைகின்றனர்.....
அப்படி அவன் எங்கு தான் சென்றிருப்பான்? - என வெளியே கேட்டால்...
அவன் பெயரை கூட சிலர் மறந்து விட, மற்ற சிலர் நினைவூட்ட, வேறு சிலர் கிடைக்க வாய்ப்பில்லை என... ஆனாலும்
அவனை இப்பொழுதும் எல்லோரும் தேடுகிறார்கள்.....
கிடைத்தால் சொல்லுங்கள்...
அவன் பெயர் - நிம்மதி!