காகிதப் பூக்கள்

பொட்டல் காட்டில் பொறந்த பொண்ணுத் தாயீ!
ஒம் பொறப்பு சொல்லும் கதை என்ன சொல்லு தாயீ!
அத்துவானக் காட்டுக்குள்ள,
அரவமில்லா ஊருக்குள்ள,
அலறல் சத்தம் கேட்குதய்யா!
அண்டமும் அதிருதய்யா!
அழுது அழுது மாஞ்சு போனேன்,i
மானம் போனதுல உசிரு
தேஞ்சு போனேன்!
செத்த ஒடம்ப படம் புடுச்சு,
சேதிகள் பல பேசி,
இணையத்தில வலம்
வருவேன்னு நினைக்கல !
என்னய உருக்குலைச்ச பயலுக,
ஊருக்குள்ள ஏமாப்போட சுத்தையில
பாக்க மனசு சகிக்கல!
கீழத்தெரு பொண்ணா,
நான் பொறந்ததால ,
-கேக்க நாதி இல்ல,
நாய் கூட மதிக்கல...!
நீதி மட்டும் கேட்டு என்ன செய்ய ..?!

எழுதியவர் : Suganya (19-Jul-21, 10:36 pm)
சேர்த்தது : ராதா
பார்வை : 110

மேலே