நீல நிறம்
வானம் நீலம் கடல் நீலம்
கண்ணன் மணிவண்ணன் நீலம்
மயில் கொண்டை நீலம் அதனிறகும்
நீலமணி ரத்தினம் நீலம் நீலமணி
மோதிரம் அணிந்தால் க்ரூர சனியின்
தாக்கமும் குறையும் என்பார் ஜோதிடர்
என்னைக் கவர்ந்த விந்தைதரும் நீலம்