அன்பே வா

தாமரை மலர் போல்
இதழ் விரித்து
உன் வாய்மொழி கேட்க ஆசை...

விண்மீன் போல்
மின்னி மின்னி
என்னைச் சுற்றி வர ஆசை...

கதிரவன் போல்
இருளை நீக்கி என் வாழ்வில்
வெளிச்சம் தர ஆசை...

ஆசைகள் பல வைத்து
அல்லாடி நிற்கிறேன்...

பேதை அவள் வதைக்கிறாள்
சொல்லாலே...

வஞ்சி அவள் மனம்
பஞ்சாய் மாற...

வழிமேல் விழிவைத்து
காத்திருக்கிறேன்...

என் அன்பே வா..!!
என் நெஞ்சோடு கலந்திட..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (22-Jul-21, 7:40 pm)
Tanglish : annpae vaa
பார்வை : 174

மேலே