பேய் யுகம்

*பேய் யுகம் என்ற தலைப்பில் கவிதை ரசிகன் எழுதிய கவிதையை பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்கவும்*


_*பேய் யுகம்*_

தொழில்நுட்பத்தை
பொறுத்தவரை
இது கணினி யுகம்....
ஆனால்
திரைப்படத் துறையைப் பொறுத்தவரை
இது ஒரு
பேய் யுகம் தான்....

பேய் என்று
ஏதோ ஒரு
நிழலைக் காட்டினார்கள்...
ஆனால்
இங்கு பலர்
தன் நிழலையே!
பேய் என்று எண்ணி
பயந்து பயந்து
வாழும் நிலையை
உருவாக்கிவிட்டனர்....!

பேயே இல்லை என்று பகுத்தறிவாளர்கள்
வாதம் செய்யும் போது ..
இவர்கள்
பேய்க்கு
கை கால் மூக்கு முழி
எல்லாம் வைத்து
அங்கீகரிக்கின்றன ....

பேய் படம்
நன்றாக ஓடுகிறது
ஆனால்
அதை பார்த்து
சிறுவர் சிறுமியர்கள் தான்
இரவில்
தனிமையில்
நடக்கக் கூட முடியாமல்
பயந்து பயந்து சாகின்றனர்...!

தனியாக
வீட்டில் இருங்கள் என்றால்
அவர்கள்
கை கால் எல்லாம்
தானாகவே ஆடுகிறது ....

சிறுவயதில்
விழும் விதையே
பிற்காலத்தில்
விருட்சமாக வளரும் என்று அறிவியலும் அறிக்கை கொடுத்திருக்கிறது...
பயத்தை விதைத்து
கோழைகளை
அறுவடை செய்யாதீர்கள்
பெற்றோர்களே...!

உங்கள் பிள்ளைகளை
பேய்களிடம் இருந்து
காப்பாற்றுவதை விட
பேய் படங்களில் இருந்து
காப்பாற்றுங்கள்
பேய் படங்கள் பார்க்க
உங்கள் பிள்ளைகளை
அனுமதிக்காதீர்கள்
பயந்து பயந்து
அதை பார்ப்பதால்
மனதளவில்
ஏற்படும் பாதிப்புகளை
எடுத்துச் செல்லுங்கள்

கடவுள்
இருக்கிறாரா இல்லையா என்று கேட்கும் பிள்ளைகளைவிட
பேய்
இருக்கிறதா இல்லையா ? என்று கேட்கும் பிள்ளைகளின்
எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டே
போகிறது ....

திரையில் வரும்
பேய் கதையை விட
பலர் தரையில்
சொல்வார்கள் பார்
பேய் கதை
அதைக் கேட்டால்
பேயே
பயந்து கொண்டு
ஓடி விடும்.....!

பெற்றோர்களே!
பிள்ளைகள் முன்னால்
பேய் பற்றி
அங்கு நடந்தது
இங்கு இது நடந்தது என்று
தயவு செய்து பேசாதீர்கள்
அப்படி பேசுவரை
வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்...

சின்ன உளி தான்
கல்லை
சிற்பம் ஆக்குவது போல்
சின்ன சின்ன
விஷயங்கள்தான்
பிள்ளைகளை
செதுக்குகிறது என்பதை
ஒரு நாளும் மறந்துவிடாதீர்கள்...!

*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (22-Jul-21, 9:03 pm)
Tanglish : pei yugam
பார்வை : 41

மேலே