கட்டிப் பிடித்தே உலகின்
வாளெடுத்து தலையை கொய்யும் வகையிலின்று
நாளெல்லாம் போரினைச் செய்யும் வேகத்தோடே
தாளினது உறுதியுடன் உள்ளனரோ. ------ (1)
வெற்றுப் பேச்சோடு வேண்டாப் பொய்யும்
முற்றிலா முறையில் கெட்ட வழியையும்
பற்றிய மனிதராய் யாவருமே. ------ (2)
கட்சியென கொள்கையென விளாங்கா ஒன்றை
கட்டிப் பிடித்தே உலகின் மாந்தர்களை
எட்டியே விரட்டும் ஆட்சியாளர் ------ (3)
அதிகாரத் திமிரில் அனைத்தையும் இகழ்ந்து
பதிலினைக் கேட்டால் ஏனமாய் பார்த்தே
மதிக்காத மந்திரியும் வேண்டுமோ ------ (4)
கதிரின் கருணையால் மழையும் பொழியவே
கதிரும் பால்பிடித்து மணியால் தலைகுனிய
குதிரும் நிறையும் எங்குமே ------ (5)
----- நன்னாடன்.