மாற்றம்

மாறிவிட்டாள் அம்மா,
மாற்றப்பட்டார் அப்பா;
பிள்ளைகள் மாற்றம்பெற்றதால்! ஒன்று மட்டும் புரியவில்லை, இவர்கள் மட்டும் மாறவில்லை,
தடுப்பது எது?
மெத்தப் படித்தப் படிப்பா,
பழமை போற்றும் இருப்பா.
ஏதோ ஓசை....,
மூலை வகுப்பறையில் பாடம்.... "மாற்றம் ஒன்றே மாறாதது"
எனப் பாடம் நடத்தியபடி
புதுமை தேடி ஆசிரியர்!!!!

எழுதியவர் : சோழ வளவன் (23-Jul-21, 11:31 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : maatram
பார்வை : 301

மேலே