இரக்க குணம் வலிக்கு

இரக்க குணம் வலிக்கு


வலிக்கு வலித்துக் கொண்டே இருக்கும் வலிமை இல்லை ||

வலிக்கு வலிக்க; வலிப்பது போல்
நெளிக்க களிக்கத்  தெரியும் ||

பகீரென பயம் காட்டி  பாசாங்கு ஆட்டம்  ஆடவும்; பிறர்  நம்பும்
படிக்கு  நடிக்கவும் தெரியும் ||

வலிக்கு இரக்கத்தை பெற்றிட; 
நிஜம்போல் துடிக்கவும் தெரியும்; நொடிக்கவும் தெரியும் ||

வலிக்கு கொக்கியை விலக்கி  பக்கியாய் பறக்கவும்
ஏமாற்றி சிரிக்கவும் தெரியும் ||

இருந்தாலும்  இதயத்துப் பக்கமே
நெருங்க விடாமல் தடுத்திடுங்கள் ||

இதயம் நம் கைவசம் இருக்கிறது
நாம் தான் அதன் கைவசமில்லை ||

இதயம் நம் பேச்சை கேட்கிறது ஆனால் நாம் தான் அதன் பேச்சை கேட்பதில்லை ||

அதனால் வருவது தான் துன்பமும்
துயரமும் கண்ணீரும் கூட சென்நீர் தாரைத்தாரையாக வழிந்தோட ||

நாசமாக்கும் வேஷம் பூசிக் கொண்டு
மோசமான மேடையேறி நடிக்கிறோம் ||

ரசிகர்கள் கூட்டம் கலை கட்டுகிறது
வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசி மகிழ்கின்றனர் ||

கெட்டுப் போகிறவர் விட்டு கொடுப்ப தில்லை விட்டு கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை ||

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jul-21, 5:29 am)
பார்வை : 89

மேலே