விலங்குகளின் வாழ்க்கை

விலங்குகளின் வாழ்க்கை

கரை புரண்டோடி
கொண்டிருக்கிறது
பெரு வெள்ளம்

மறு கரையின்
பச்சை புதருக்குள்
எட்டி பார்க்கும்
மருண்ட விழிகள்
இரண்டு

அங்கும் இங்கும்
சுழன்றாட தலையை
எட்டி பார்த்தது

ஓ..! அது மானின்
விழிகள்
மருண்டுதான் இருக்கின்றது

வெள்ளத்தை நீந்தி
வர மருண்டா?
அல்லது அதற்குள்
படுத்துறங்கும்
முதலைக்கு மருண்டா?

கொலை விழியுடன்
காத்திருந்த
புலிக்கு மருண்டா?
அல்லது நய வஞ்சக
பார்வையுடன் காத்திருந்த
நரிக்கு மருண்டா?

இதற்கெல்லாம் மருண்டு
புதரோடு இருந்து
விட்டால் மட்டும்
உயிர் என்ன பத்திரமா?

அனு தினமும்
போராட்டம்தான்
அத்தனையும் கடந்து
அதன் வாழ்க்கையும்
அழகாக ஓடத்தான்
செய்கிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (25-Jul-21, 6:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 54

மேலே