நிதானம்

நிதானம்


உள்ளத்துக்கு உள்ளே ஒரு
உள்ளம் உள்ளது அது தான்
நல்லதை நல்ல தென்று
உணர்த்தி சொல்ல வல்லது

இல்லாததை இல்லை என்று
ஒதுக்கி தள்ள சொல்வது இதில்
எதை கேட்பது எதை விடுவது என
சிரசை பிய்த்து கொள்ளுது

தானத்திலே பெரிய தானம்
நிதானம் என்பது நியாயமானது
நிதானத்தை இழந்து விட்டால்
மானம் மரியாதை வீதி செல்வது

இருப்பதை பறந்தது என்றால்
அதனில்  நம்பிக்கை கொள்வது
பறந்ததை இருக்கிறது என்றால்
காண தேடித்தேடி நாள் கழிப்பது

சுயபுத்தி சொல்புத்தி என்று
இரண்டு உள்ளது;
சுயபுத்திமேல் நம்பிக்கை இழந்து; சொல்புத்தியை நம்பிக் கொண்டு
வீதியில் நிற்பது

தனியாக பிறந்தவன் தனியாக
வாழும் போது சொல்புத்திமேல்
நம்பிக்கை கொள்வது இல்லை
உள்ளம் சொல்வதை கேட்பது

நல்லதோ தீயதோ தீர்மானிக்க
மேலே ஒருவன் இருக்கிறான் உன்
தேவைக்கு சேவை செய்கிறான்
வேறென்ன வேண்டும் உலகில்
°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
"கண்டேன் பாக்கம் "

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jul-21, 6:04 am)
Tanglish : nidhaanam
பார்வை : 63

மேலே