அம்மா கவிதை


அம்மா சிரித்தாள்

அம்மா உன்மேல்
ஒரு வரிக் கவிதை
என்று காட்டினேன்

இது என்னடா கவிதை
என்றாள் அம்மா

தாய் சிரித்தால் கவிதை
இல்லையா என்றேன்

தாய் ஒரு வரியில்
முடிந்து விடும் கவிதை
இல்லையடா கண்ணா
என்று கன்னத்தில்
செல்லமாய் தட்டினாள்
அன்னை

நான் யோசிக்கிறேன்

----கவின் சாரலன்





எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-11, 5:19 pm)
Tanglish : amma kavithai
பார்வை : 1130

மேலே