சிரிப்பு எத்தனை சிரிப்படா
நிலவைப் பார்த்தான்
சிரித்தது
அமுதைப் பொழிந்தது
மலரைப் பார்த்தான்
சிரித்தது
தலை அசைத்தது
அவளைப் பார்த்தான்
அவள் பார்க்கவும்
இல்லை
சிரிக்கவும் இல்லை
தனக்குத் தானே
சிரித்துக்
கொண்டிருக்கிறான்
----கவின் சாரலன்