காதல் முழு வெண்நிலா
நேரிசை வெண்பா
எங்கள் மனமின்று சேர்ந்தகாலை மொட்டாகி
திங்கள் பகலாய் வளர்ந்தது -- மங்குமாலை
பங்கய மென்று வலர்ந்த துறவாய்மு
யங்கிப் பெரிதாமின் நோய்
இன்று காலைதாம் நாங்கள் சந்ததிக்க எங்களுக்குள் காதல்
அரும்பி மொட்டாகி அதுவே இன்றைய ஒரெப் பகலில்
வளர்பிறை சந்திரனைப்போல நினைத்து நினைத்து
வளர்ந்து முழுநிலா வானது. இன்று மாலை முழுநிலா
மலர்ந்தது போல எங்கள் சந்திப்பில் காதல் நோய் மலர்ந்து
பெரிதானது.
காமத்துப்பால். குறள். 7/15
........