தோழிக்கு அறிவுரை
தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை
காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை
அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை
இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!