கேளடா குடை மடக்கி

கேளடா குடை மடக்கி சொல்வதை நானும்

பாரினிலே மழை பொழிதல் பொய்த்தே போனால்

யாருமே செழித்தலாய் வாழ்தல் அறிதே


காமத்தை குடை மடக்கி அதிகம் கொண்டால்

பலமும் உடம்பிலே நீச்சமாகி சோகை தோன்றும்

சுறுசுறுப்பு அதனாலே அற்றே போகுமே


மனமது குடை மடக்கி கவலைக் கொண்டால்

மருந்தால் கூட தீர்க்க முடியா பிணிகள் தோன்றும்

நெஞ்சமும் அதனாலே வெம்பி போகுமே


வயதுமீறிய குடை மடக்கி ஆசை வந்தால்

வறுமையும் நம்மைப் பற்றி தினமும் ஏளனம் செய்யும்

மானமும் மரியாதையும் அதனால் விலகுமே


ஏழையிடம் குடை மடக்கி உறுதித் தந்தால்

முடிந்த வரையில்

எழுதியவர் : நன்னாடன் (2-Aug-21, 8:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே