போதி மரம்

இல்லற வாழ்வை துறந்து
புத்தர் போல் வாழ நினைத்து
அங்குமிங்கும் தேடினேன்
போதி மரத்தை ..!!

களைத்துப்போய்
ஒரு மரத்தின்
கீழ் அமர்ந்தேன் ..!!

களைப்பு நீங்கியதும்
சிந்தித்தேன்
அலைபாயும் மனதை
ஒரு நிலைப்படுத்தினால்
எல்லா மரமும் போதிமரமே
என்று தெளிவாக புரிந்தது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Aug-21, 9:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pothayi maram
பார்வை : 111

மேலே