மாற்றம்

உயரத்திலிருப்பவரை உயர்த்த முயல்வதும்
பள்ளத்திலிருப்பவரை தாழ்த்த முயல்வதும்
தான் உங்கள் வேலையா!
மாறுதலுக்காய்…
உயரத்தில் உள்ளவரை கீழ் நோக்கியும்
பள்ளத்திலுள்ளவரை மேல் நோக்கியும்
நகர்த்த முயலுங்கள்.
உயரங்களின் கீழ்மையையும்
பள்ளங்களின் மேன்மையையும்
நீங்கள் தரிசிக்கக் கூடும்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (3-Aug-21, 7:58 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 147

மேலே