வேதம் என்ன சொல்கிறது

நேரிசை வெண்பாக்கள்

நாலே உயர்வேதம் பாரதம் போற்றிய
தாலேயாய்ந் தார்பலதை பாரதில் ---. நூலே
யிதைமுழுமை யாய்படித்தார் எங்குமில்லை இங்கு
மிதையளப்பர் கற்காம லே


ரிக்மறையில் வான்மழை இந்திரனை தானியம்
யக்ஞயாக மன்னர் பகைஞ்சராம் -- சொக்கசோம
பானம் குதிரை உடல்நல மந்திர
மானதெல்லாம் சொல்லியிருக் கும்

தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் (சோமபானம்), நல்ல மழை, தானிய
விளைச்சல், தானம்,(தட்சனை) அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட
செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல்
நலம், மன உறுதி, எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும்
கிராதர்கள் என்ற இனத்தாருக்கும் இடையிலான போ பற்றி விவரிக்கிறது.


யஜூர் வேதம்
...
நடுவாம் யஜூரு மடுத்தஜென்மம் மாந்தர்
கொடும்வினை ஜென்மவினை ஊழும் -- தடுக்கும்
பிறப்பு முபனிடத மெல்லாம் விளக்கி
இறப்பை விரிக்கு மிது


அவரவர் தேர்ந்தெடுப்பதுதான் - என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம்
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு'


சாமவேதம்

சாமவேதம் தேகவாற்றல் மந்து நடனமிசை
தாம சநெறியுடன் வாழ்க்கையை -- ஏமம்
அனைத்தும் மனிதற்கு வாழவே சொன்னார்
முனைந்ததையும் தேடு முனக்கு


இந்து மெய்யியலில் குறிப்பாக வேதாந்தத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.[5]
இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவை சாம வேதத்தில் இருந்தே
தோற்றம் பெற்றன என பொதுவாக கருதப்படுகிறது.[6]அதர்வண வேதம்

வெற்றி பெறவழியை இவ்வேதத் தில்தேடி
கற்றிடு மந்திரம் மாந்த்ரீகம் -- கற்றபின்
இற்றவம் ஏற்றிடு சிற்பக் கலையையும்
கற்றிடு சாத்திரங் கண்டு


இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று
உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண
வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
உப வேதம் நானகாம்
உரைப்பேன் தனூர்வேத முமத்தமுடன் மேலும
உரைத்திடுவேன்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Aug-21, 10:20 am)
பார்வை : 20

மேலே