குமரன் அளித்தபேட்டி

குமரன் அளித்த பேட்டி.

குன்றெல்லாம் குடியிருக்கும் குமரா,
குமரி முதல் இமயம் ஆண்ட தமிழன்,
குடை சாய்ந்ததேன் சொல்.

மற்றவர் சொல் கேட்டு,
சாதிக் குட்டையில் வீழ்ந்தாய்,
சாமி என்றும் கோவிலென்றும்,
காலத்தை சாகடித்தாய்.
கலை எனச் சொல்லி,
படம் எடுத்து காசு செய்ய,
தினம் தினம் பார்த்து,
நேரத்தை வீணடித்தாய்,
எனக் கூறி மயிலேறினான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-Aug-21, 9:43 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 12

மேலே