அந்த ஒரு நிமிடம்
அதிகாலை விடியலில்க ண்முன் பல வண்ணங்களில் பூச்சிகள் பறப்பதை கண்டான் ஆனந்த் .
அவற்றின் வண்ணங்களில் மனமுவந்து கைப்பற்ற எண்ணி அவற்றை பின் தொடர்ந்தான் எத்தனை நெருங்கிய போதும் அவற்றில் ஒன்றை கூட அவனால் தொட இயலவில்லை அனைத்து பூச்சிகளும் வடிவில் மிகசிறியதாய் இருந்தது
விரல்களுக்குள் அடங்கா வண்ணம்..இது எண்ண வகை பூச்சி வண்ணங்கள் உண்டு ஆனால் சிறகுகளும் உருவமும் இத்தனை சிறியாதாக உள்ளதே என்று எண்ணிய நொடியில் .ஏதோ ஒன்று அவனை கடிக்க படார் என்று அடித்தவாறு கண் விழித்து அடித்த இடத்தை பார்த்தான்.
இரத்தம்வழிய ஒரு கொசு இறந்திருந்தது அங்கே அப்போது தான் உணர்ந்தான் தான் கண்னடது கனவென்விறும்.கனவில் வந்தது அனைத்தும் கொசுக்களே என்று.
மீண்டும் உறங்க முயன்ற நேரத்தில் வாயிலில் அழைப்பு மணி ஒலிக்க .உஷா காலிங் பெல் அடிக்குது யார் வந்திருக்காங்கனு பாரு என்று கூறி தலையணையை எடுத்து முகத்தில் புதைத்த படி உறங்க முயன்றான்.
ஆனால் தொடர் அழைப்பு மணியால் அவனால் உறங்க முடியவில்லை .மீண்டும் ஏய் காலிங் பெல் சவுண்ட் காதுல விழலையா என்று கத்தி கொண்டே எழுந்தமர்ந்த போதே உணர்ந்தான் அவன் மனைவி அங்கே இல்லை என்று.
மனதிற்குள் ஆமாம்ல அவ தான் சண்டை போட்டு போய் இரண்டு நாளாகுதே என்று நினைத்து கொண்டே எழுந்து சென்று கதவின் அருகில் சென்று யாரு என்று கேட்க .
வெளியிலிருந்து நான் தான் பால்காரம்மா வந்திருக்கேன் என .உடனே சரி என்று கூறி சமையலறை சென்று பாத்திரத்தை கொண்டு வந்து கதவை திறந்தான்.
இவனை பார்த்த உடன் பால்காரி மூனு மாதம் பால் பாக்கி தரல இதுல பெருசா பாத்திரத்த தூக்கினு வந்துட்ட என்று கடுங்குரலில் கேட்க.
ஆனந்த் தலையை சொரிந்தபடி இல்லக்கா இன்னும் இரண்டு நாள்ல மொத்தமா செட்டில் பண்ணிடுறேன் என்றான்.
உடனே ,பால்காரி இதையே தான் உன் பொண்டாட்டியும் இரண்டு மாதமா சொல்லிட்டே இருந்துச்சு இன்னைக்கு அவ எங்கன்னே தெரியலை ஆளையே பாக்க முடியல.பால் வேணும்னு பத்து தடவ கால் பண்ணுவா இன்னைக்கு என் கால் எடுக்கவே மாட்றா .நீயும் ஊரை விட்டு ஓடமாட்டனு என்ன நிச்சயம் இன்னைக்கு சாயாங்காலத்துக்குள்ள மொத்த பாக்கியும் செட்டில் பண்ற வழிய பாரு.இல்லனா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கனத்த குரலில் கூச்சலிட
அக்கம் பக்கம் வீட்டார் எல்லாம் இவன் வீட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனந்த் தலை குனிந்தபடி நான் எதாவது ஏற்பாடு பண்றேன்கா வேலை இல்லை தேடிட்டிருக்கேன் இதுக்கு முன்ன ஒரு நாளாவது மிஸ் ஆகியிருக்காகா
.அந்த நம்பிக்கையில தான் மூனு மாதம் பால் ஊத்துனேன் இப்போ உனக்கு எப்போ வேலை கிடைச்சு நான் எப்போ வசூல் பண்றது .எனக்கு இன்னைக்கு பணம் வந்தே ஆகனும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
இவன் கதவை மூடிவிட்டு உள்ளே சென்று அந்த ஒரு நிமிஷம் நாம மேனஜர் கிட்ட இதுமாதிரி தலை குனிஞ்சு நின்னுட்டிருந்தா இன்னைக்கு இத்தன பேர் முன்னாடி தலகுனியுற அவசியம் வந்திருக்காது என்று எண்ணிக்கொண்டே தன் தலையில் தான் அடித்து கொண்டான் .