லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 06

06
'இன்னிசை பாடி வரும்...' தமிழிசையின் தொலைபேசி பாடியது. எடுத்த பார்த்தவள் புது இலக்கமாக இருக்கே என யோசித்தவள் மெதுவாக,
"ஹல்லோ..."
"ஹாய் தமிழிசை... எப்பிடி இருக்கிறீங்கள்..." - ஆணின் குரல்
"முதல்ல நீங்கள் யாருன்னு சொல்லுங்கோ..."
"நான் ஆதி கதைக்கிறன். குரல் ல தெரியவில்லையா...?"
"ஓஹ்... சாரி... குரல் சரியா ஞாபகத்தில வரல்லை... அதான்.... "
"அதுவும் சரி தான். பொண்ணு பார்க்கிறது என்று சொல்லி பெருசுகள் மட்டுமே கதைச்சிட்டு இருந்திச்சுகள். எங்களை கதைக்க விட்டால் தானே என..."
"ஆனா நீங்கள் நல்லாவே என்னை சைட் அடிச்சீங்கள் தானே..."
"அதெப்படி உங்களுக்கு தெரியும்..."
"நானும் தான்... அதான்..."
"அப்போ என்னை பிடிச்சிருக்கா உங்களுக்கு..."
"பிடிக்காமலா கோயிலுக்கு வந்தன்..."
"போட்டோவுக்கும் நேரில் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கும் இல்லையா..." - ஆதி
"ஏன்... என்னில ஏதும் வித்தியாசம் இருந்திச்சா..." - தமிழிசை
"ம்... நிறையவே.... எல்லாம் சொல்லமுடியாது. கலியாணத்துக்கு பிறகு சொல்லுறன்...."
"அடிவாங்க..."
"ஐய்யய்யோ... அப்பிடி இல்லைங்க... நேரம் போகும். கதைக்கிற கொஞ்ச நேரத்தில் சொல்லிமுடிக்கேலாது. அதான்..." - ஆதி
"சரி சரி நம்பிட்டன்..." - தமிழிசை
மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
"சரி இனி நாங்க அடிக்கடி சந்திச்சுக்கொள்ளலாம் தானே..." - ஆதி
"ஏன்... எதுக்கு... அப்பிடி என்ன அவசரம்..." தமிழிசையினுள் ஒருவித பதட்டம் பரவியது.
"ஐயய்யோ தப்பா நினைக்க வேண்டாம்... சும்மா தான். இப்பிடி ஒரு தேவதை கிடைச்சிருக்கு... நேர் ல கதைக்கிறது போல வருமா..."
தேவதை என்ற சொல் அவளுக்கு மனதினுள் சொல்லமுடியா சந்தோசத்தையும் கொடுத்து வெட்கப்பட வைத்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
"அதான் சீக்கிரமே கலியாணம் ஆகிடும் தானே.... பக்கத்திலேயே இருந்து கதைச்சிட்டு இருங்கோ..." - தமிழிசை
"கலியாணத்துக்கு பிறகு கதைக்கிறதுக்கு எங்க நேரம் கிடைக்கபோகுது..." - ஆதி
"நினைப்பு தான்... அது சரி. எல்லோ பொண்ணுங்க கூடவும் இப்பிடி தான் கடலை போடுவீங்களாjQuery17107683879299771927_1628008493752?"
"யாரு அது எல்லா பொண்ணுங்க..."
"அதான் பார்க்கிறேனே... பேஸ்புக்கில்.... நிறைய பொம்பளை பிள்ளைகள் லைக், கொமெண்ட் போடுறினம்... நீங்களும் வழியிறதை பார்த்தன்..."
"நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீங்களா.... தேடு தேடு என்று தேடியாச்சு... என்ன பெயர் ல இருக்கிறீங்கள்..."
" ம்... 'தமிழின் இசை' என்ற பெயர் ல..."
" நான் தமிழிசை என்று தேடி தேடி...." ஆச்சரியத்தில் "உண்மையா தான் சொல்லுறீங்களா... நீங்கள் எனக்கு ஏற்கனவே பிரண்ட் ஆ இருக்கிறீங்கள்.... இது எப்பிடி சாத்தியம்..." லப் டப் இல் தேடி பார்த்தவனுக்கு தமிழிசை அவனில் நண்பர்கள் பட்டியலில் இருப்பது ஆச்சரியத்தை கொடுத்தது.
"ஊர் உலகத்தில் இருக்கிற ஒரு பொம்பிளை பிள்ளைகளையும் விட்டு வைக்கிறதில்லை... எல்லோருக்கும் வரிசையா ரிக்குவெஸ்ட் அனுப்பிட்டு இருக்கிறது... உங்க போட்டோ பார்த்தப்ப எங்கேயோ பார்த்திருக்கிறேனே என யோசிச்சேன். பேந்து தான் பேஸ்புக்கில் இருக்கிறத கண்டுபிடிச்சேன்..."
"என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கோ... யாரென்றே தெரியாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் லைக், கொமெண்ட் எல்லாம் பண்ணியிருக்கிறோம். நீங்கள் உங்கட போட்டோவை போடவில்லை. அதான் தெரியாமல் போயிட்டுது..."
(((கலியாண பேச்சு தொடரும்)))