லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 07

7
வழமை போல் விடிந்திருந்த ஒரு காலைப் பொழுதில்,

"கவி.... கவி..." வாசலில் ஒரு குரல்

"பிள்ளை... கேற்றடியில் உன்ர பிரண்ட்ஸ் ஆரோ கூப்பிடுறினம் போல... பாரு..." - தாய் பவளம்

கேற்றடிக்கு போன கவி,

"அடடே... அண்ணி.... வாங்கோ... வாங்கோ...." என்றவள்

"அம்மோய்... உங்க மருமகள் வந்திருக்கிறாங்க" கூறியவாறு தமிழிசை உள்ளே அழைத்து சென்றாள்.

"வாங்க பிள்ளை... என்ன விசயம் காலையிலேயே வந்திருக்கிறீங்கள்... சொல்லியிருந்தால் ஆதியை அனுப்பியிருப்பேனே..." - பவளம்

"பரவாயில்லை மாமி... எங்கட பக்கத்து கோயில் ல பொங்கல் பொங்கினது. அப்பா தான் கொண்டுவர இருந்தவர். எனக்கு டவுண் ல வேலை இருக்கு. அதான் நானே எடுத்திட்டு வந்தேன்..." - தமிழிசை

"தெரிஞ்சிருந்தால் ஆதியை அனுப்பியிருப்பேன் கூடமாட ஒத்தாசைக்கு..." - பவளம்

"ஆதிட்ட வரச்சொல்லி சொன்னனான்... மறந்திட்டார் போல..." - தமிழிசை

"அட அவன் உந்த கோயில் குளம் எல்லாம் போனது இல்லை. அண்டைக்கே பொண்ணு பார்க்கோனும் என்றுட்டு தான் கோயில் வந்தவன். யாராச்சும் பின்னுக்கு நின்று துரத்தினால் தான் போவான்..." - மாமி பவளம்

தமிழிசையின் கண்கள் வீட்டை சுற்றி வந்ததை கண்ட கவியழில்

"என்ன அண்ணி... அண்ணனை தேடுறீங்களோ... "

"சீச்சி... அப்பிடியில்லை...." வெட்கத்தில் நெளிந்தாள்

"அவன் இன்னும் எழும்பலை பிள்ளை... இன்னும் நித்திரை தான்... இரவிரவா உந்த கோதாரி விழுந்த போனை நோண்டிட்டு இருக்கிறது. பிறகு சூரியன் உச்சிக்கு வரும் வரைக்கும் தூங்கிறது..." - பவளம் கரிச்சுக் கொண்டினாள்

"ஓஹ்... சரி மாமி நான் போயிட்டு வாறன். டவுணுக்கும் போகோனும்..." - தமிழிசை


****************************


நித்திரையால் கண் விழித்து எழுந்த ஆதி முதல் வேலையாய் வாட்சாப் இல் தமிழிசைக்கு ஒரு காலை வணக்கம், ஐ லவ் யூ என்று ஹார்டினுடன் சேர்த்து தட்டிவிட்டு 'இந்த பொண்ணுங்களுக்கு நாம தான் முதலில் மெசேஜ் பண்ண வேண்டி இருக்கு... அவங்க பண்ணினால் கெளரவம் குறைஞ்சிடும் போல இருக்கு...' என நினைத்துக் கொண்டு தன் கடமைகளை பார்க்க தொடங்கினான்.


அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு தொலைபேசியை கையில் எடுத்தவனுக்கு குழப்பமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. பதிலுக்கு ஒரு 'குட் மோர்னிங்' மட்டுமே வந்திருந்தது.

'என்னாச்சு இவளுக்கு... ஏதோ கோபமாய் இருக்கிறாள் போல இருக்கு...' என யோசித்தவனுக்கு தான் கோயில் போகாதது தெரிந்து தலையில் அடித்துக் கொண்டான். இப்போ நாய் பேய் கத்து கத்த போகிறாளே... என்ன பண்ணுறது...' என தமிழிசையை சமாதானப்படுத்தும் வழிமுறையை யோசிக்கலானான்.


'இப்பவே கதைச்சு சமாதானப் படுத்தினால் தான் உண்டு. இல்லாட்டிக்கு கோவம் கூடி பத்ரகாளி ஆட்டம் ஆட தொடங்கிடுவாள்' என நினைத்தவன் அவளுக்கு அழைப்பை எடுத்தான்.


(((கலியாண பேச்சு தொடரும்)))

எழுதியவர் : பெல்ழி (4-Aug-21, 2:32 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 138

மேலே