பெருச்சாளி இறைச்சி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதபித்தந் தாள்பிடிப்பு வன்பீந சங்குஷ்டம்
ஓதுதிர நோயோ டுறைகீடம் - பேதியிவை
பேர்ந்தகல ஓடும் பெருச்சாளி யின்கறியால்
தீர்ந்தவெழில் ஓவியமே செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்விறைச்சி பித்த, சிலேட்டும நோய்கள், வாதம், பீநசம், பெருவியாதி, இரத்ததாதுவைப் பற்றிய நோய்க்கிருமி, கழிச்சல் ஆகியவற்றை விலக்கும்