இரண்டே ஆயுதங்கள்

ஒழுகிசை அகவலோசை நேரிசை ஆசிரியப்பா

அத்(ஸ்)திரம் ச(ஸ்)த்திரம்

கண்டார் இரண்டே ஆயுதம் அன்றும்
இன்றும் மாறா ஆயுதம் இரண்டாம்
கையால் கல்லும் எறிய அம்பாம்
வில்லின் புறப்படும் கணையும் ஆயுதம்
கத்தி வீசித் தாக்கல் மற்றும்
கைக்குண் டெறித லதையும் !கூட
அத்(ஸ்)திரம் என்றே கொள்வர்
தூர எறிந்து தாக்கலத் திரமே

அன்று கார்ணன் கொண்டது பலதாம்
அத்திரம் பிரம்மாத் திரம்நா காத்திரம்
அர்ஜுனன் பாசு பதாத்திரம் கொண்டான்
எந்தனை எத்தனை யத்திரம் போரில்
அத்த்னை எங்கே போனது சொல்லார்
வந்தது இன்று நீள்துப் பாக்கி
குறுந்துப் பாக்கி கையெறி குண்டு
தபா லிலும்குண் டுவைத்தார்
தூரத் தாக்கல் கோழையே கொரானா
கையொடும் வாளொடும் போரிட வீரமே

கைபீ ரங்கி தள்ளுபீ ரங்கி
டாங்கிபீ ரங்கி ஏவு கணையென
கன்னி வெடியாம் காரில் வெடியாம்
கொரானா கூட அத்திர மென்றார்
இன்று கோழை யாகி
கொரானா கிருமி யைப்பரப் பினாரே

எழுதியவர் : பழனி ராஜன்! (5-Aug-21, 7:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 85

மேலே