ஹைக்கூ கவிஞர் இராஇரவி

ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!

மழை நின்றபின்னும்
மழைத்தூரல்
கிளைகளிலிருந்து!

தாவும்போது
தவறிவிழுந்தால்
சேர்ப்பதில்லை குரங்கை!

யாருக்கு ஊட்டுவது
குழப்பத்தில் தாய்ப்பறவை
வாய்திறக்கும் குஞ்சுகள்!

அஞ்சுவதே இல்லை
பாவம் செய்திட
அரசியல்வாதிகள்!

ரசிப்பது தவறன்று
பறிப்பது தவறு
மலர்களை!

வித்தையை முடித்து
தட்டைப் பார்த்தான்
காலியாக!

சாணியின் மீது
வைத்ததால்
வருத்ததில்பூசணிப்பூ!

பிறந்தவுடனேயே
நீந்தி விடுகின்றது
மீன்குஞ்சு !

--

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (14-Aug-21, 7:04 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 151

மேலே